ரயில் கழிவறை தண்ணீரில் டீ தயாரிப்பு... ஒப்பந்ததாரருக்கு அபராதம்
ரயில் கழிவறைக்குள் வரும் தண்ணீரை பிடித்து அதிலிருந்து டீ தயாரித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கேண்டீர் கான்ட்ராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராம் விதிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணிக்கும் பயணிகள், குறிப்பாக விரைவு ரயில்களில் பயணிப்போர் ரயிலில் விற்பனை செய்து வரும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். அதிலும், டீ, காபி கண்டிப்பாக வாங்கி சுவைக்கின்றனர். நாம் அருந்தும் டீ சுகாதார முறையில் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் பயணிகள் வாங்குகின்றனர். ஆனால், அவர்களை முகம் சுழிக்க வைத்த டீ தயாரிக்கும் வைரல் வீடியோ அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த வீடியோவில், நீல நிற சட்டை அணிந்த ரயில்வே கேண்டீன் ஊழியர் ஒருவர் ரயில் கழிவறையில் இருந்து டீ கேன்களில் தண்ணீர் பிடித்து ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்கிறார். அவற்றை வாசலில் நின்றபடி மற்றொரு ஊழியர் பெறுகிறார்.இதன்மூலம், கழிவறையில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடித்து டீ தயாரித்து விற்பன செய்வதாக புகார் எழுந்தது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பலர் ரயில்வே அதிகாரிகளை குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பான தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கு சென்றதை அடுத்து, அந்த வீடியோவை ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை-ஐதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்த உண்மைநிலை தெரியவந்ததை அடுத்து, கேண்டீன் ஒப்பந்ததாரருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com