திசையன்விளை அருகே மிட்டாதார்குளத்தில் உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அணைக்கரை பங்கு மற்றும் வள்ளியூர் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது.

உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அணைக்கரை மற்றும் மிட்டாத்தார்குளம் பகுதிகளில் அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் போதைக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

மிட்டார்தார்குளத்தில் நடந்தபள்ளிகுழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அருட்தந்தை ஏ.ஜே.ரெக்ஸ் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து , போதையற்ற சமுதாயத்தை உருவாக்க வள்ளியூர் கல்வி மாவட்ட கல்வி அதிகாரிமுத்துராஜ் தலைமையில் எடுத்துக்கொண்டனர்.

More News >>