கன மழையால் கால்வாயில் பாய்ந்த கார்... கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்று ( ஜூன் 26)காரில் தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

நாகர்கோவிலை அடுத்த பறக்கின்கால் அருகே கார் வந்த போது, கால்வாயில் கார் கவிழ்ந்தது. தொடர் மழையால் சாலை தெரியாமல் கால்வாயில் விழுந்ததாக தெரிகிறது.அதிர்ஷ்வசமாக மணிகண்டனும் அவரின் மனைவியும் விபத்தில் இருந்து உயிர் தப்பினர்.

அதே போல, கன்னியாகுமரி இன்று பெய்த மழையால் பகவதியம்மன் கோவிலினுள் சாக்கடை நீர் புகுந்ததாக சொல்லப்படுகிறது. பகவதியம்மன் கோவில் செல்லும் பாதையில் மழைநீர் ஓடையின் மீது ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், நகராட்சி துய்மை பணியாளர்களால் மழைநீர் ஒடையை சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. லாட்ஜ்களில் இருந்து வரும் மலக்கழிவுகள் இந்த ஓடையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்தான் பார்வையிட்டு நடைபாதை கடைகளை அகற்றி ஒடையை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது .

More News >>