மீண்டும் நொறுங்கியது சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஜன்னல்.. பயணிகள் அலறல்

அமெரிக்காவில் சிகாகோ மிட்வே விமான நிலையத்திலிருந்து நேவார்க் லிபர்ட்டி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு கிளேவ்லேண்ட் ஹாப்கின்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

போயிங் 737 வகை விமானத்தின் அவசரகால வழி ஜன்னலில் ஏற்பட்ட கீறலால், பராமரிப்பு சோதனைக்காக 81 பயணிகளுடன் பத்திரமாக இறக்கப்பட்டது. விமானங்களின் ஜன்னல்கள் பல அடுக்குகளை கொண்டிருக்கும். இந்த விமானத்தில் வெளிப்புற அடுக்கு சேதமடைந்திருந்தது. அதைத் தவிர எஞ்ஜின் சேதம் எதுவுமில்லை.

“ஏதோ ஒன்று விமானத்தின் ஜன்னல்மேல் மோதும் சத்தமும், ஜன்னல் நொறுங்கும் சத்தமும் கேட்டது. பின்னர் பெரும் கீறல் ஏற்படும் சத்தமும் கேட்டது. அந்த வரிசையில் இருந்த பயணிகள் எழுந்து ஓடினர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் சத்தமாக அழுவதற்கு ஆரம்பித்தனர்," என்று அந்த விமானத்தில் பயணித்த ஒருவர் கூறியதாக, இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தரையிறங்கிய விமானத்தில் வந்த பயணிகள் பிற்பகல் 1 மணிக்கு வேறு ஒரு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சில வாரங்களுக்கு முன்னர் இதே நிறுவனத்தின் விமானம் ஒன்று எஞ்ஜின் கோளாறு காரணமாக பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கியதும், அவ்விபத்தில் பெண் ஒருவர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>