காணாமல் போன சரண்... துடித்து போன அமீர்... பாளையங்கோட்டையில் பாசப் போராட்டம்!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த அமீர் என்ற இளைஞர், தனது வீட்டில் சரண் என்று பெயரிட்டு பூனையை ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்தார். குடும்பத்தின் ஒரு அங்கமாகவே சரண் வாழ்ந்து வந்தது. ராஜவாழ்க்கை வாழ்ந்த சரண் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. திடீரென காணாமல் போய் விட்டது.

கடந்த ஜூன் 19ஆம் தேதி நள்ளிரவு முதல் சரண் காணாமல் போனது. பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இதனால், மிகுந்த கவலையுடன், அந்த பூனையைத் தேடும் முயற்சியாக அமீர் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார்.

"சரண்"ஐ கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு நன்றியுடன் சிறிய பரிசும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டு, திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூனையின் புகைப்படத்துடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

அமீரின் இந்த செயல் சமூகத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. செல்லப்பிராணிகளை உண்மையான பாசத்துடன் வளர்ப்பவர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக பலரும் கருதுகின்றனர்.

சரண் திரும்ப கிடைக்குமா?அமீரின் கவலை தீருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

More News >>