பொத்துகிட்டு ஊத்துதயா பூமி :களக்காடு சிங்கிகுளத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு:
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளத்தில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக லட்சக்கணக்கான குடிநீர் வீணாகி வருகிறது.
நெல்லை மாவட்ட மக்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து பல கோடி ரூபாய் செலவில் குழாய்கள் பதிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிங்கிகுளம் பகுதியில் ஏற்பட்ட குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வீணாவது, மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . விலைமதிப்பற்ற குடிநீர் இப்படி, வீணாவது எப்படி ? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
குழாயில் ஏற்பட்ட உடைப்பினால் பனை மரம் உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. இந்த காட்சியை மக்களே வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். குடிநீருக்காக மக்கள் போராடும் நிலையில், மறுபுறம் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர வீணாவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோடிக்கணக்கான ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களில் இத்தகைய குறைபாடுகள் ஏற்படுவது, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவே கருதப்படும் என்றும் குடிநீர் வடிகால் வாரியம் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.