குழித்துறை மேற்கு கழுவன்திட்டை ரயில் நிலையம் செல்லும் சாலையை சீரமைக்க விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. கழிவுநீர் ரயில் நிலையம் முன்பு தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது . ரயில் நிலையத்தில் கழிவறை இல்லாதது குறித்து, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, அந்த பகுதியில் விஜய் வசந்த் எம்.பி ஆய்வு செய்தார்.அப்போது , குழித்துறை கமிஷனர் ராஜேஷ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். மேலும் ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு ரயில்வே நிலைய அணுகு சாலை மற்றும் கழிவறைகளை சீரமைக்கவும் கேட்டுக் கொண்டார். ரயில் நிலைய கட்டடத்தையும் புதுப்பிக்க வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், பாகோடு மோகன்தாஸ், தேவிகோடு பஞ்சாயத்து தலைவர் ரதீஷ்குமார், மூத்த காங்கிரஸ் நிர்வாகி அட்வகேட் தங்கமணி, கன்னியாகுமரி ரயில்வே அலோசனை கமிட்டி பொறுப்பாளர் சூசைராஜ் உட்பட பலர் இருந்தனர்.