பாளையங்கோட்டை : சிதிலமடைந்து போன கதிர் மேல்நிலைப்பள்ளி நடை மேம்பாலம்

பாளையங்கோட்டையில் அமைந்துள்ள கதிர் மற்றும் மேரி சார்ஜன்ட் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தினந்தோறும் பயன்படுத்தும் நடை மேம்பாலம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

திருநெல்வேலி - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில், நகரின் இதயப் பகுதியில் கதிர் மேல்நிலைப் பள்ளி , மேரி சார்ஜன்ட் பள்ளிகள் அமைந்துள்ளன. இந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் . பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த மேம்பாலத்தில் கான்கிரீட் தளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து போயுள்ளன. ஆங்காங்கே விரிசல்களும் காணப்படுகிறது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல இந்த நடை மேம்பாலத்தையே நம்பியுள்ளனர். சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த பாலம் மாணவர்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இது குறித்துப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கூறுகையில், "மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மிக முக்கியம். பெரிய விபத்து நடப்பதற்கு முன்னால், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து உடனடியாக இந்த நடை மேம்பாலத்தைப் சீரமைக்க வேண்டும் என்கின்றனர்.

More News >>