வள்ளியூர் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் சல்லித்தனம்... தலையில் கொட்டிய நீதிமன்றம்

திருநெல்வேரி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது, மனைவி பிரேமா. இந்த தம்பதி தங்களுக்கு சொந்தமான சீவலப்பேரியுள்ள வீட்டுடன் கூடிய 1,313 சதுர அடி இடத்தை வள்ளியூர் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைத்து 15 லட்சம் கடன் பெற்றுள்ளனர். கடனுக்காக ஐசிஐசிஐ நிறுவனத்திடம் 1,06,935 ரூபாய்க்கு இன்சூரன்சும் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஜெயராமன் கடந்த ஆண்டு திடீரென இறந்து விட்டார். எனவே, அடமான கடனை ஐசிஐசிஐ நிறுவனத்திடம்இருந்து பெற்று விடுவதாக சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் முதலில் கூறியுள்ளது. ஆனால், பின்னர் இன்சூரன்ஸ் தவறுவதலாக இறந்து போன ஜெயராமன் பெயரில் எடுக்காமல் சாட்சி கையெழுத்து போட்ட , பிரேமா பெயரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இதனால், முழு கடனையும் பிரேமா செலுத்த வேண்டும். இல்லையென்றால், அடமானம் வைக்கப்பட்ட நிலத்தை ஏலத்தில் விட்டு விடுவதாக சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மிரட்டியுள்ளது. இதையடுத்து, மன வேதனையடைந்த பிரேமா திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், நிறுவனம் செய்த தவறுக்கு பிரேமா பொறுப்பாக மாட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் பைனான்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

More News >>