எவரெஸ்ட் அடித்தள முகாமை எட்டிய சங்கர் நகர் ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவி லலித் ரேணுவுக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகம் .வாசகர் வட்டம் இணைந்து கவியரசு கண்ணதாசனின் 99 வது பிறந்தநாள் விழா ,மாதாந்திர இலக்கிய நூல் அறிமுக கூட்டம், சாதனையாளர்களுக்கு பாராட்டு வழங்கும் விழா நூலக கலையரங்கில் நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் மரியசூசை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். வாசகர் வட்ட துணைத்தலைவர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். நூலகர் முத்துகிருஷ்ணன் கலை பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் பாப்பாக்குடி இரா செல்வமணி, சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச் செயலாளர் கவிஞர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சாதனையாளர்களை பாராட்டி பேசினார். அதோடு, ஆயிரம் ரூபாய் செலுத்தி நூலகப் புரவலானார். எழுத்தாளர் காயல் அருள் ஆயிரம் செலுத்தி நூலகப்புரவலரானார்.தேசிய அளவில் கட்டுரை போட்டிகளில் சாதனை படைத்த குடியரசு தலைவரிடம் விருது பெற்ற சங்கர்நகர் சாரதா பள்ளி மாணவன் த. ராகுல், 6 வயதில் எவரெஸ்ட் அடித்தள முகாமில் ஏறி சாதனை படைத்த சங்கர் நகர் ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவி லலித் ரேணு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி எழுதிய அரண்மனை நகரில் அமுதத்தமிழ் என்ற நூலை எழுத்தாளர் காயல் அருள் அறிமுகம் செய்து வைத்து பேசினார். கவியரசு கண்ணதாசனின் ஒரு பாடல் ஒரு பொருள் சிறப்பு நிகழ்ச்சி கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் திருக்குறள் இரா.முருகன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருவருள் லத்தீப், முருகேசன், திருக்குறள்பிரபா, கவிஞர் பிரபு புன்னைச்செழியன், இசக்கி ராஜன், ஆடிட்டர் மீனாட்சிநாதன், தங்க லதா, கவிஞர் மூர்த்தி, மாணவி காயத்ரி, கவிஞர் முத்துவேல், செல்வராணி, தளவாய் மாடசாமி, வழக்கறிஞர் மணிமாலா, மாணிக்கவாசகம், கோபாலகிருஷ்ணன், நூலகர் அகிலன் முத்துக்குமார்,பேராசிரியர்ஹரிஹரன்,கவிஞர் சண்முகசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கவியரசு பாடலை பாடி விளக்கம் அளித்தனர். நிறைவாக மாவட்ட மைய நூலகர் சித்திரைலிங்கம் நன்றி கூறினார்.

More News >>