பாளையங்கோட்டை கே.டி.சி நகர் நட்ஸ் அண்ட் சாக்கோஸ் பேக்கரியில் வாங்கிய பொருளில் புழு... கடைக்கு சீல்

திருநெல்வேலி கே.டி.சி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த "நட்ஸ் அண்ட் சாக்கோஸ்" என்ற பேக்கரியில் வாங்கப்பட்ட உணவுப் பொருட்களில் புழுக்கள் நெளிந்தால், கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள "நட்ஸ் அண்ட் சாக்கோஸ்" கிளையில், ஒரு வாடிக்கையாளர் பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் கிஸ்மிஸ் பழங்கள் உட்பட ரூ. 2,198 மதிப்புள்ள பொருட்களை வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ஐந்து கிலோ முந்திரிப் பருப்பில் புழுக்கள் நெளிந்ததைக் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக, அந்த வாடிக்கையாளர் அந்த உணவுப் பொருட்களைக் கடைக்குத் திரும்பக் கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பாக, வாடிக்கையாளர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது .

தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் பேக்கரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, இரண்டு கிலோ அத்திப் பழங்களும் கெட்டுப்போன நிலையில் இருந்ததைக் கண்டறிந்து, அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு, உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடு கண்டறியப்பட்டதால், உடனடியாக அந்த பேக்கரிக்கு சீல் வைத்து மூடினர்.தமிழ்நாடு முழுவதும் உள்ள "நட்ஸ் அண்ட் சாக்கோஸ்" கிளைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

More News >>