பரபரப்புக்கிடையே தூத்துக்குடி- நாசரேத் டயோசிசன் தேர்தல் தேதி அறிவிப்பு

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் பணிகள் வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கவுள்ளது. பாரபட்சமின்றி தேர்தல் நடத்தப்படும் என தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகி அதிகாரியும் ஓய்வு பெற்ற நீதிபதியான ஜோதிமணி தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தென்னிந்திய திருச்சபையின் கீழ் செயல்படும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி திருமண்டல ஆலோசகராக நீதிபதிகள் இரத்தினராஜ், ஜான் சந்தோசம், பேராயர் (பொறுப்பு) ஏ ஆர் செல்லையா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாக அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த நிர்வாக அதிகாரியும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஜோதிமணி கூறுகையில்

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் கால ஒழுங்குகள் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல 2013 ஆவது ஆண்டு விதிகளின்படி நான்கு மாதங்கள் தொடர்ந்து கீழ் மட்டத்திலிருந்து கடைசியாக நவம்பர் 12ம் தேதி பொருளாளர், செயலாளர் , பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும்

இந்த தேர்தலை பொறுத்தவரை முதலில் சேகர தலைவர்கள் யார் யார் எல்லாம் ஓட்டு போட தகுதியானவர்கள் என்ற பட்டியலை தயார் செய்வார்கள் பின்னர் அதை தேவாலயங்களில் பட்டியலை வைக்கப்படும். அதற்கு யாராவது ஆட்சேபனை இருந்தால் அதற்கென்று நியமனம் செய்யப்பட்டுள்ள மூன்று ட்ரிப்யூனல் அதிகாரிகளிடம் சென்று முறையிடலாம். அங்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் எங்களை அணுகலாம்.

அதன்பிறகு இறுதி பட்டியல் முடிவு செய்யப்படும் . முதலில் கீழ் மட்டத்திலிருந்து ஒவ்வொரு பதவிக்கும் தேர்தல் நடைபெறும் . அதில் பெற்றி பெறுபவர்கள் மேல் பதவிகளுக்கான தேர்தலில் ஓட்டு போட வேண்டும். இந்த விதியின் காரணமாக நான்கு நான்கரை மாதங்கள் தேர்தல் நடைபெறுவதால் அதற்கான தேர்தல் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது

இங்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் யாரும் இந்த ஊரை சேர்ந்தவர்கள் அல்ல . எங்களுக்கு இங்கு உள்ளவர்கள் யாரையும் தெரியாது அதனால் நாங்கள் பாகுபாடு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. நிச்சயமாக பாரபட்சமில்லா இல்லாமல் தேர்தல் நடத்தப்படும்.

மேலும் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள எங்கள் குழுவினர் தேர்தல் நடத்தக் கூடாது என ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர் . இது தொடர்பாக நீதிமன்றம் சார்பில் எங்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது . அதற்கான அறிக்கை நீதிமன்றத்தில் விரைவில் அளிக்கவுள்ளோம் . நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லுகிறதோ அதன்படி நடப்போம். நீதிமன்றம் எங்களை நடத்த வேண்டும் என்று சொன்னால் தேர்தலை நடத்துவோம் .இல்லை என்றால் வெளியேறுவோம்.

திருமண்டலத்திற்கான தேர்தலை தள்ளிப் போட்டால் அது திருமண்டலத்திற்கு நல்லது கிடையாது . பிஷப்பின் பதவி காலம் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முடிவடையவுள்ளது. எனவே தான் இந்த தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, தேர்தலை புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாக அதிகாரிகள் நடத்தக்கூடாது . தென்னிந்திய திருச்சபை கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாக அதிகாரி ஜோதி மணியிடம் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல முன்னாள் நிர்வாகி இன்ஸ்டின் தலைமையில் ஒரு பிரிவினர் மனு அளித்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

More News >>