நெல்லை வரும் செல்வப்பெருந்தகை: காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட கிராமக் கமிட்டி உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 5ம் தேதி திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை பங்கேற்கிறார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும், செல்வபெருந்தகைக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 28)நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ராபர்ட் புரூஸ் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில வக்கீல் பிரிவு இணைத் தலைவர் மகேந்திரன், தென்காசி மேற்கு மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி. துரை, நெல்லை கிழக்கு மாவட்ட பொருளாளர் பால்ராஜ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மோகன் குமார ராஜா, தமிழ்ச்செல்வன், அழகிய நம்பி, விவேக் முருகன், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ராம்சிங், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சசிகுமார், மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ராஜேந்திரன், அய்யப்பன், முகமது அனஸ் ராஜா, மாரியப்பன், வெள்ளபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், சொக்கலிங்க குமார், சொர்ணம், வட்டாரத் தலைவர்கள் பாக்கியகுமார், பிலேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் தியாக சுரேஷ், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், அலெக்ஸ், மாவட்ட கவுன்சிலர் தனித்தங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கூட்டணி ஆட்சிக்கு வலியுறுத்த வேண்டும், நெல்லை சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

More News >>