குலையன்கரிசலில் காமராஜருக்கு சிலை கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தனர்

தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் அமைக்கப்பட்டுள்ள கர்மவீரர் காமராஜரின் சிலையை கனிமொழி கருணாநிதி எம்பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் கிராம மக்கள் சார்பில் காமராஜரின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த காமராஜரின் திருவுருவ சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், காமராஜரின் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் வழங்கினார்.

More News >>