336 மில்லியன் பயனாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்த டுவிட்டர்
டுவிட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பயனாளர்களின் பாஸ்வேர்டும் டுவிட்டர் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் சேமிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த அந்திறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் ஒரு சில பயனாளர்களின் பாஸ்வேர்டுகளை தெரிந்து கொண்டனர்.
தற்போது, கோளாறை சரிசெய்துவிட்டதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தாலும், பாஸ்வேர்டுகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளுமாறு 336 மில்லியன் பயனாளர்களுக்கும் டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் எற்பட்ட கோளாறு காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இது போல கோளாறு நடக்கமால் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com