தூத்துக்குடியில் ஹச் .எம் .எஸ் உழைப்பாளர் சங்கம் சார்பில் மாணவ - மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்

உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தமிழ்நாடு ஹச். எம் .எஸ் உழைப்பாளர் சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டிற்கான சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி விருதுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா தூத்துக்குடி மணிநகரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

ஹெச் .எம் .எஸ் தேசியத் துணைத் தலைவர் டாக்டர். ராஜலெட்சுமி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மாவட்ட கழக செயலாளர் எஸ்.டி.ஆர் சாமுவேல்ராஜ், தொழிலதிபர்கள் கிஷோர், ஜெயம், பாளையங்கோட்டை மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, உதவி ஆய்வாளர் ராஜா, தூத்துக்குடி துறைமுகம் யுனைடெட் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் பொது செயலாளர் ஜான் கென்னடி, தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் வட்டத் தலைவர் வினோத், ஹெச்.எம்.எஸ் திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

More News >>