தென்காசி பள்ளி அதிபர் வீட்டில் ஒரு கிலோ நகை, ரூ.20 லட்சம் நகை கொள்ளை... அதிர்ச்சி சம்பவம்

தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம் அரு​கே​யுள்ள சாலைப்​புதூர் நவநீதகிருஷ்ணபுரத்​தைச் சேர்ந்​தவர் ராஜசேகரன். இவர் அடைக்​கலப்​பட்​ட​ணம் பகு​தி​யில் மெட்​ரி​குலேஷன் பள்​ளி, பி.எட். கல்​லூரி உள்​ளிட்ட கல்வி நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். தனது குடும்​பத்​தினருடன் பள்ளி வளாகத்​தில் உள்ள வீட்​டில் வசிக்​கிறார்.

இந்​நிலை​யில், குடும்​பத்​தினருடன் திருமண நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்​ப​தற்​காக ராஜசேகரன் வெளியூர் சென்​றிருந்​தார். நேற்று காலை​யில் அவரது வீட்​டின் கதவு திறந்து கிடந்​தது. வீட்​டில் இருந்த பீரோ திறக்​கப்​பட்​டு, ஒரு கிலோ தங்க நகைகள் மற்​றும் ரூ.20 லட்​சம் திருடப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

தகவலறிந்த ஆலங்​குளம் போலீ​ஸார் அங்கு சென்​று, சோதனை செய்தனர். திருட்​டில் ஈடு​பட்​டது யார், எவ்​வளவு நகை, பணம் திருடப்​பட்​டது என்று விசா​ரித்து வரு​கின்றனர். மேலும், தனிப்​படைகள் அமைத்​து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

More News >>