எங்க தல...எங்க தல...தோனிதான்..!: ரசிகர்கள் செயலால் நெகிச்சி!
சச்சினுக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் கடவுள் போஸ்டிங்கை ரசிகர்கள் தோனிக்கு அளித்துள்ளனர்.
இந்தியாவின் நட்சத்திர கொண்டாட்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்க்ஸ் எதிரான கிரிக்கெட் தொடர் நடந்தது.
இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, அடுத்து களம் இறங்கத் தயாரானார் கேப்டன் தோனி. அப்போது, மைதானத்தின் ஸ்டேடியம் பகுதியிலிருந்து திடீரென ஓடிவந்த ரசிகர் ஒருவர் ‘தல’ தோனியின் காலில் யாரும் எதிர்பாரா நேரத்தில் விழுந்து வணங்கினார்.
மைதானத்துக்குள் விளையாடும் வீரர்களைத் தவிர மைதான ஊழியர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்குக் கூட விளையாட்டு நேரத்தின் போது மைதானத்தினுள் வர அனுமதியில்லை.
இத்தகைய சூழலில் ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்ததால், இப்படி வருவது தவறு என காலில் விழுந்த ரசிகருக்கு அறிவுரையும் ரசிகரின் மனம் நோகாதபடி வாழ்த்தும் கூறி அனுப்பினார்.
இதுபோல் ‘தல’ தோனியின் காலில் ரசிகர்கள் மைதானத்துக்குள் ஓடிவந்து விழுவது பல முறை நடந்துள்ளது. சச்சினுக்குப் பின்னர் தோனிக்குத் தான் இத்தகைய வெறியர்கள் ரசிகர்களாக அமைந்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com