திசையன் விளை அருகே ராதாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் இணைய தள பயிற்சி முகாம்

திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் நெல்லை கிழக்கு மாவட்டம், இராதாபுரம் தெற்கு ஒன்றியம் பா.கமுகவர்கள் மற்றும் ஐடி விங்க் அணியினருக்கான இணைய செயலி பயிற்சி முகாம் நடந்தது

தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இராதாபுரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் க.எரிக் ஜூடு பாண்டியன் தலைமையில் க.நவ்வலடி ஊராட்சி காமராஜர் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.ராதாபுரம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் எட்வின் வளன் அரசு,மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் கோ.கேசவன், மாவட்ட மீனவரணி தலைவர் சதீஷ், மாவட்ட மீனவரணி துணை தலைவர் அல்போன்ஸ், மாவட்ட மீனவரணி துணைஅமைப்பாளர்கள் ஜான்சன்,உவரிமரியதாஸ், மோகன்தாஸ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் நவனீதகிருஷ்ணன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் லிங்கதமிழரசன், மாவட்ட சிறுபாண்மை அணி துணை அமைப்பாளர் ஜேசுதாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சரவணன் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி குறித்து பயிற்சி வழங்கினார்.தகவல் தொழிநுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் அன்றோ அக்ஸில், கழக நிர்வாகிகளின் அலைபேசியில், செயலியை டவுன்லோடு உறுதுணை புரிந்தார்.முன்னாள் மாவட்டதொண்டரணி துணை அமைப்பாளர் தனபால் நன்றியுரை கூறினார்.

நிகழ்ச்சியில் இராதாபுரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள், பாக முகவர் கள்,ஐடி விங்க் உறுப்பினர்கள் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

More News >>