ஸ்மிருதி கையால் விருதா..?தேவையே இல்லை!- காலியாய்க் கிடந்த தேசிய விருது விழா
தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழாவில் ஜனாதிபதிக்குப் பதிலாக அமைச்சர் ஸ்மிருதி இராணி விருதி வழங்கியாதால் வெற்றியாளர்கள் விழாவைப் புறக்கனித்தனர்.
சினிமா கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில் நாட்டின் 65-வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் 65 ஆண்டு காலமாக இல்லாத வழக்கமாக விருது பெறவுள்ள வெற்றியாளர்களில் 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது அளிப்பார் என அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதுமிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 137 வெற்றியாளர்களிலிருந்து வெறும் 11 பேருக்கு மட்டுமே விருது ஜனாதிபதி கையால் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், மீதமுள்ள வெற்றியாளர்களுக்கு மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விருது வழங்கி கவிரவிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தேசிய விருது வெற்றியாளர்களில் பலர் இச்செய்தியால் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து வரலாறுகளில் இல்லாத வழக்கமாக நேற்று விழா சபை காலியாகவே கிடந்தது.
குறிப்பாக தென்னிந்திய கலைஞர்கள் அதிகமானோர் இவ்விழாவை புறக்கணித்தனர். தமிழ் படங்களிலிருந்து இந்தாண்டுக்கான தேசிய விருதை இயக்குநர் செழியனின் ‘டூ லெட்’ திரைப்படம் பெற்றது. ஆனால், செழியனும் விருது விழாவை புறக்கணித்தார்.
இசை வடிவமைப்பாளரும் ஆஸ்கர் விருது பெற்றவருமான ரசூல் பூக்குட்டி இதுகுறித்து கூறுகையில், “திரைப்பட கலைஞர்களுக்காக மூன்று மணி நேரத்தை ஒதுக்க முடியாத இந்திய அரசு எங்களுக்கு விருது விழாவே நடத்தியிருக்க வேண்டாமே! கேளிக்க வரி என எங்களது 50% உழைப்பை எடுத்துக்கொள்ளும் அரசு எங்களுக்கு அளிக்கும் மரியாதை இவ்வளவுதான்!” எனக் கொதித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com