அம்பை நகரில் இரவில் சுற்றி திரிந்த கரடி நாய்கள் விரட்டியதால் ஓட்டம்

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களான பாபநாசம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கரடி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது சுற்றித் திரிவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் அம்பாசமுத்திரத்தில் நேற்றிரவு கரடி சுற்றி திரிந்துள்ளது. குறிப்பாக, அம்பை சுப்ரமணியபுரம் பொத்தை பகுதியில் தெருவின் நடுவீதியில் கரடி ஓடியுள்ளது. அதனை தெருநாய்கள் குரைத்தபடி, விரட்டவே மக்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அம்பை நகர் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பது அச்சத்தையும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது, எனவே, வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

More News >>