அமெரிக்க தீவில் பதற்றம் : ஒரே நாளில் 250 முறை நிலநடுக்கம்
அமெரிக்காவில் ஹவாய் தீவுகளில் ஒரே நாளில் தொடர்ந்து 250 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து எரிமலை வெடித்து சிதறியது. இதனால், அங்கு வசித்த மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவுகளில் எரிமலை வெடிக்கும் என்றும், நிலநடுக்கம் ஏற்படும் என்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே எச்சரிக்கைவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், எரிமலை வெடித்து சாலை வரை தீக்குழம்பு பீறிட்டு வந்தது. இதனால், சாலை எங்கும் விரிசல்விடத் தொடங்கின.
கடந்த 24 மணி நேரத்தில் 250 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஆங்காங்கே எரிமலையகள் வெடித்து சிதறியது. எந்நேரமும், எரிமலை குழம்பு வெளியேறலாம் என்ற காரணத்தால், மக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் தங்குவதற்காக, அமெரிக்க செஞ்சிலுவை சங்கம் அவசர கால முகாம் ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால், பாதுகாப்பு கருதி மக்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com