100 சதவிகித தேர்ச்சி குறைந்தால் தண்டனை கூடாது .... தூத்துக்குடியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி பாதுகாப்பு, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைள் வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். முக்கியமாக, பணிப் பாதுகாப்பு, பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புதல் 100 சதவிகித தேர்ச்சி இல்லையென்றால், ஆசிரியர்களுக்கு தண்டனை வழங்க கூடாது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

More News >>