நோயாளிகளுக்கு ஊசி போடும் கம்பவுண்டர்கள்... நெல்லையில் பகீர் கிளப்பும் நாம் தமிழர்

திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சி இணை செயலாளர் மாரிசங்கர் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் மருந்து கடைகளின் அருகில் தனியறை அமைத்து கடை உரிமையாளர்கள் , மருந்தாளுனர்கள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக பொதுமக்களுக்கு ஊசி மருந்து செலுத்துகிறார்கள். இதனால் , உயிரிழப்புகள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

ஊசி மருந்து செலுத்துவதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மட்டுமே அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1948ம் ஆண்டு மருந்தகச் சட்டத்தின்படி, மருந்தாளுனர்கள் மருந்துகளை வழங்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் மட்டுமே தகுதியானவர்கள் . அப்படியிருக்கையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மருந்தாளுனர்கள் நோயாளிகளுக்கு ஊசி செலுத்துகிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More News >>