திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் தாய் கோவில் எது தெரியுமா?

திருச்செந்தூர் முருகன் கோயிலின் மகா கும்பிஷேகம் ஜூலை 7 ஆம் தேதி திங்கட்கிழமை காலை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கோயிலின் யாகசாலை பூஜைகள் இன்று (ஜூலை 1) மாலை தொடங்கி நடைபெறுகிறது.திருச்செந்தூர் முருகன் கோயிலில் கருவறையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய பால சண்முகராகவும், சுப்ரமணியனாகவும் முருகப்பெருமான் காட்சி கொடுக்கிறார். இந்த நிலையில் திருச்செந்தூரில் இருக்கும் மூலவர் சிலை திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் குறுக்குத்துறை முருகன் கோயில் பாறையில் இருந்து உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

டச்சுக்காரர்களால் கடத்தப்பட்ட திருச்செந்தூர் முருகன் சிலை வட மலையப்ப பிள்ளை என்பவரது கனவில் முருகன் சொன்ன வழிகாட்டுதலின்படி நடுக்கடலிலிருந்து மீட்கப்பட்டு மீண்டும் திருச்செந்தூரில் வைக்கப்பட்டது. உப்பு நீரில் இருந்ததால் சேதம் அடைந்த அந்த சிலையை புதுப்பிக்க வட மலையப்ப பிள்ளை முயற்சி செய்தார்.

அதற்காக பல்வேறு இடங்களில் பாறைகள் தேடிய போது தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் பாறைகள் தெய்வீகத் தன்மை கொண்டது என்பதை அறிந்தார். இதனைத் தொடர்ந்து அந்தப் பாறையில் திருச்செந்தூர் முருகன் சிலையை செதுக்கியதாக கூறப்படுகிறது. அதனால்தான் இந்த கோயில் திருச்செந்தூர் முருகனின் தாய்வீடு என அழைக்கப்படுகிறது.

மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ள நீர் ஓடும் நிலையில் இந்த கோயிலில் வைக்கப்பட்டுள்ள மூலவர் சிலை நீருக்குள் மூழ்கி இருக்கும். வெள்ளம் வடிந்த பிறகு கோயிலை முழுமையாக சுத்தப்படுத்தி உற்சவர் சிலை, சப்பரங்கள், மற்றும் உண்டியல் ஆகியவற்றை மேல் கோயிலில் இருந்து மீண்டும் குறுக்குத் துறை முருகன் கோயிலுக்கு எடுத்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>