உயிரை பறித்தால் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - நெல்லையில் கொல்லப்பட்ட பிஜிலியின் மகன் முதல்வருக்கு வேண்டுகோள்

திருநெல்வேலியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி, காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்தார். 3 மாதங்களுக்கு முன்பு, ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில்,அதிகாலை தைக்காவிற்கு தொழுகைக்கு சென்றார். பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு தெற்கு மவுண்ட்ரோடு வழியாக நடந்து வந்த போது, பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்டி கொன்றது. இந்த சம்பவம் அப்போது, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது

இப்போது, அஜித்குமார் கொல்லப்பட்டதையடுத்து, ஜாகீர் உசேன் பிஜிலியின் மகன் இச்சூர் ரகுமான் மெக்காவில் இருந்து பேஸ்புக்கில் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, எனது தந்தை கொல்லப்பட்ட போது ஏ.சி. செந்தில்குமார் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோடிர டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் அதிகபட்ச கோரிக்கையாக இருந்தது. ஆனால், சஸ்பன்ட்தான் செய்தனர். போலீசாரால் ஒருவர் கொலை செய்யப்பட்டால் டிஸ்மிஸ் செய்தால்தான் நியாயமாக இருக்கும். இதுதான், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உடனடி, நிவாரணமாக அமையும். எங்கள் தந்தை கொலைக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டுதான் இருக்கிறோம். கடந்த மூன்றரை மாதங்களாக நாங்கள் அனுபவித்து வரும் கஷ்டத்தை தம்பி அஜித்குமார் குடும்பமும் அனுபவிக்க போகிறது. மிகவும் எளிமையான குடும்பமாக தெரிகிறார்கள். அவர்கள் எப்படி இந்த வழக்கை நடத்த போகிறார்கள் என்று தெரியவில்லை.

நான் சிங்கப்பூரில்தொழில் செய்து வந்தேன். தந்தை கொல்லப்பட்ட பிறகு, இங்குதான் குடும்பத்துடன்இருக்கிறேன். என் தந்தை கொலைக்கு முக்கியகாரணம் சிவில் பிரச்னை. பள்ளிவாசல் நிலத்தை மீட்டெடுக்க நடத்திய போராட்டத்தால் அவர் கொல்லப்பட்டார். அந்த நிலம் பள்ளிவாசலுக்கு மீட்டு கொடுத்தால்தான், எனது தந்தையின் கொலைக்கு நியாயம் கிடைத்ததாகும். இப்போது , மனிதர்களை நான் நம்புவதில்லை. இதனால், மெக்காவுக்கு வந்துள்ளேன். கடவுளைதான் நம்புகிறேன். உங்களை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

More News >>