நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் லிட்டில் பிளவர் பள்ளியில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு

நெல்லை டவுனிலுள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் நேற்று காந்திமதி அம்பாள் பக்தர் பேரவை நிர்வாகிகள் காசி விஸ்வநாதன், சிதம்பரம் சீனிவாசன் , ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு குணசீலன்,பரமசிவன், லிட்டில் ஃப்ளவர் பள்ளி தாளாளர் மரிய சூசை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது, ' ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் கிளை கமிட்டி மற்றும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கைங்கரிய டிரஸ்ட் சார்பில் ஆணி பெரும் திருவிழா திருதேரோட்டம் நடைபெறும் ஜூலை 8ம் தேதி மகா அன்னதானம் நடைபெறுகிறது.

வரும் 8ம் தேதி தேரோட்ட தினத்தில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ லசரி சிவபிரகாசா சத்யஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் டவுன் லிட்டில் பிளவர் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணாதானம் நடைபெறும். 75 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு பசியாற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

More News >>