அவென்ஜர்ஸ் இன்பினிடி வார்..ஒரே வாரத்தில் 6,405 கோடி வசூல் சாதனை
By Isaivaani
மார்வெல் ஸ்டூடியோஸ்-ன் 19வது படமான அவென்ஜர்ஸ் இன்பினிடி வார் திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 27ம் தேதி வெளியானது.
உலக அளவில் ஒரு புதிய சாதனையும் படைத்துள்ளது அவென்ஜர்ஸ் இன்பினிடி வார். வெளியான முதல் 7 நாட்கள் முடிவில் 6405 கோடி வசூல் சாதனை புரிந்து, தி பாஸ்ட் அண்ட் தி பியூரியோஸ் வசூலை முந்தியது. இந்தியாவில் மட்டும் முதல் வாரத்தில் சுமார் 157 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் சாதனை படைத்துள்ளது.
மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பல சூப்பர் ஹீரோஸ் திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அவென்ஜர்ஸ், கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி, ஸ்பைடர் மென், டாக்டர் ஸ்ட்ரென்ஜ் , கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட பல காமிக் கதைகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அவென்ஜர்ஸ் (2012) மற்றும் அவென்ஜர்ஸ் ஏஜ் ஒப்பி அல்ட்ரான் (2015) தொடர்ச்சியாக வெளியான அவென்ஜர்ஸ் இன்பினிடி வார் திரைப்படத்தில் இதுவரை வெளியான அணைத்து சூப்பர் ஹீரோகளும் ஒரே நேரத்தில் (சுமார் 20 சூப்பர் ஹீரோஸ்) தானோஸ் என்ற கொடிய வில்லனிடம் சண்டையிடும் காட்சிகள் அமர்களமாக உள்ளது. மேலும் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com