சொந்த வாகனத்தை வாடகைக்கு விட்டால்... நெல்லை சி.ஐ.டி.யூ பேரவை கூட்டடத்தில் தீர்மானம்
நெல்லை மாவட்ட சாலை போக்குவரத்து சங்கம் சிஐடியூவின் 6வது ஆண்டு பேரவை கூட்டம் நேற்று குறிச்சி ( ஜூன் 1)சிஐடியூ மாவட்டக் குழு அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் முருகன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். சாலை போக்குவரத்து சங்கத்தின் துணைத்தலைவர் சதக் வரவேற்றார். அரசு போக்குவரத்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோதி தொடக்க உரையாற்ற, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மரிய ஜான் ரோஸ் அறிக்கை சமர்ப்பித்தார் . மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன் அவர்கள் வரவு செலவு அறிக்கையை சமர்பித்தார். அரசு போக்குவரத்து சங்கத்தின் தலைவர் காமராஜ் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன துணை பொதுச்செயலாளர் திருமலை நிறைவுறையாற்றினார்
நெல்லை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் தலைவராக முருகன் மாவட்ட பொதுச் செயலாளராக மரிய ஜாண் ரோஸ் மாவட்ட பொருளாளராக பாலசுப்பிரமணியன் , துணைத் தலைவர்களாக செல்வராஜ் , சதக் , ஞானராஜ் , சங்கர் சர்மா ,மனோகரன் சங்க துணைச் செயலாளர்களாக ராஜ்குமார் ,வசன பெருமாள் இசக்கி, ஜனனி அருணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் . புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் .பெட்ரோல் டிசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வேன் கார்களுக்கு பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.