வற்புறுத்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட்...மறுத்து கெத்து காட்டிய இந்தியா!
பிங்க் பந்து கிரிக்கெட் ஆட வற்புறுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு மறுப்பு தெரிவித்து தனது ‘கெத்து’ குறையாது எனக் காட்டியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சர்வதேச அளவில் மிகப்பெரும் அவப்பெயரை சம்பாதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. கிரிக்கெட் விளையாட்டு என்றாலே ஆஸ்திரேலியாதான் என்ற நிலை மாறி சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி.
இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டார். முதல் நாளே ‘இந்தியாவை இந்திய மண்ணிலேயே வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இழந்த மரியாதையை மீட்போம்’ என சவால் விடுத்தார் லாங்கர்.
இந்நிலையில், இந்திய அணியை தொடர்ந்து பகலிரவு ஆட்டத்தை ‘பிங்க் பந்து ஆட்டம்’ முறையில் விளையாட ஆஸ்திரேலியா வலியுறுத்தி வந்தது. ஆனால், “எங்களை யாரும் வற்புறுத்த முடியாது. எங்கள் அணி தற்போதைக்கு எந்தவொரு பகலிரவு ஆட்டமும் விளையாடது” என இந்திய அணி மறுத்துவிட்டது.
சர்வதேச அளவில் பெரிய கிரிக்கெட் அணிகள் இதுபோன்ற பிங்க் பந்து ஆட்ட முறையை தவிர்த்தே வருகின்றனர். இந்த வகையில் இந்திய அணியும் தொடர்ந்து தனது ‘கெத்து’ குறைந்துவிடாமல் காத்து வருகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com