தென்காசி அருகே வீடு புகுந்து இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை... போலீஸ்காரர் கைது!

தென்காசி அருகே வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் அருகேயுள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகுமார் (29). இவர் தென்காசி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஒரு வீட்டிற்குள் நுழைந்து இளம்பெண் ஒருவர் குளிப்பதை எட்டிப்பார்த்தார்.

இதைக் கண்டு அந்த பெண் கூச்சலிட்டார். இதையடுத்து, மனோகுமார் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்தினரிடம் கூறவே, உடனடியாக குருவிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மனோகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More News >>