மக்களை கவர்ந்த நெல்லையப்பர் கோவில் தேரோட்ட அழைப்பிதழ்... நெல்லை இளைஞரின் கைவண்ணம்
நெல்லையப்பர் கோவிலின் ஆனி தேரோட்டம் ஜூலை 8ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் நெல்லை மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 5 லட்சம் மக்கள் தேரோட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழாவுக்க்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதலும் வைரலாகி வருகிறது. இந்த அழைப்பிதழில் கோவிலின் தேராட்டம், சாமி சிலைகள் உள்ளிட்டவற்றை தத்ரூபமாக வரைந்தவர் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.நெல்லையை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்ற இளைஞர்தான் அழைப்பிதலில் இடம் பெற்ற காட்சிகளை தத்ரூபமாக வரைந்துள்ளார். அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது .