நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ1000 உதவிதொகை: தமிழக அரசு

’நீட்’ தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்துடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைகான ‘நீட்’ நுழைவுத் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ’நீட்’ தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியுள்ளனர்.

தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டில் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கபடாததை கண்டித்தும், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்துடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தையும் அரசே வழங்கும். மாணவர்களுடன் செல்லும் நபருக்கு பயணப்படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கும் என்றும், நுழைவு தேர்வின் சீட்டின் நகல் மற்றும் பள்ளியின் அடையாள அட்டை நகலை கொண்டு உதவித்தொகை வழங்கப்படும். இது தொடர்பான ஏதாவது சந்தேகம் இருந்தால்  14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளாம்’. என தெரிவித்துள்ளார்.

More News >>