வெடிபாக்ஸை ஒப்படைக்க தவறிய மேட்டூர் லாஜிஸ்டிக் நிறுவனம்.. அபாராதம் தீட்டிய நுகர்வோர் ஆணையம்

திருநெல்வேலி  பாளையங்கோட்டை பாதாள மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த தங்கப்பன் என்பவரின் மகன் அபிஷேக் . இவர், கடந்த 2024 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து மேட்டூர் லாஜிஸ்டிக் நிறுவனம் மூலம்  திருச்சியில் உள்ள உறவினருக்கு 12 வெடிபாக்ஸ்களை பரிசாக அனுப்பியுள்ளார் . சம்பந்தப்பட்ட நிறுவனம்  11 வெடி பாக்ஸ்களை  மட்டும் ஒப்படைத்துள்ளது . ரூ.44, 088 மதிப்புள்ள வெடிபாக்ஸை ஒப்படைக்க தவறிவிட்டது.

இதனால் , மன உளைச்சலுக்குள்ளான அபிஷேக்,  வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த ஆணைய தலைவர் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் அபிஷேக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக  ரூ.15,000 வழக்கு செலவு ரூ. 5000.- வெடி பாக்ஸ் விலை ரூ. 44,088  ஆகியவற்றை  வழக்கு தாக்கல் செய்த தேதியில் இருந்து தற்போது வரை  6% வட்டியுடன் சேர்த்து கொடுக்க உத்தரவிட்டனர். 

More News >>