திருநெல்வேலியில் பி.என்.ஐ அமைப்பு சார்பில் தொழில் கண்காட்சி

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையிலுள்ள தனியார் ஹோட்டலில் பி.என்.ஐ அமைப்பின் (Business Network International) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.நிர்வாகி முகம்மது ரியாஸ் முன்னிலை வகித்தார்.திருநெல்வேலி தூத்துக்குடி,கன்னியாகுமரி, மாவட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பிஎன்ஐ அமைப்பின் கூட்டத்தில் இலட்சினை வெளியிடப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பி.என்.ஐ அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில்,  சர்வதேச அளவில் தொழில் முனைவோர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக பிஎன்ஐ உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எங்களது அமைப்பு சார்பில் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 26, 27, 28, ஆகிய தேதிகளில் திருநெல்வேலி வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.  இதில் சுமார் 120 -க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறவுள்ளன. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்  அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

More News >>