கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி: நெல்லையில் சோகம்!

நெல்லை சங்கர்நகரில் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பாளையங்கோட்டை தியாகராஜநகரைச் சேர்ந்த ரமேஷ் செல்வம் என்பவரின் மகன் சாம்ராஜ், சங்கர்நகரில் உறவினர் வீட்டில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால், சாம்ராஜ் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார்.

தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசாரும், நெல்லை டவுன் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாம்ராஜின் சடலமாக மீட்டனர். அவரின் உடல், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் பெரியவர்களின் துணையின்றி நீர்நிலைகளுக்குச் செல்லக் கூடாது என்று தீயணைப்புத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

More News >>