தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு கோவிலில் அனுமதி மறுப்பு: நெல்லையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

நெல்லையப்பர் திருக்கோயில் 519-வது திருத்தேரோட்டத்தில் பங்கேற்ற தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது,

"ஆசியாவிலேயே மிக உயரமான இந்த திருத்தேர், 519-வது தேரோட்டமாக இன்றைக்கு சிவ சிவா என்ற கோஷத்தோடு வெகு விமரிசையாகத் ஓட தொடங்கியுள்ளது. இந்தத் தேரோட்டத்தில் பங்கேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு தேரோட்டத்தில் ஏற்பட்ட சிறுசிறு சிக்கல்கள் இந்த ஆண்டு முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிட்டது. குறிப்பாக, 59 லட்சம் ரூபாய் செலவில் புதிய சண்டிகேஸ்வரர் தேர் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சிற்பங்களும் புனரமைக்கப்பட்டு, புதிய தேர் வடமும் வாங்கப்பட்டுள்ளது. தேரோட்டத்திற்காக அனைத்து சாலைகளும் செப்பனிடப்பட்டது. தேர்கள் மழை மற்றும் வெயிலில் சேதமடையாமல் இருக்க, 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 18 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கண்டமாதேவி திருத்தேரை கடந்த ஆண்டு அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்று சேர்த்து முதல்வர் ஓட வைத்தார்.

2026 தேர்தல் வர இருப்பதால் எடப்பாடி பழனிசாமிக்குவிஷக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் திருச்செந்தூரில் நடைபெற்ற குடமுழுக்கைப் பார்த்ததும், "இனிமேல் எப்பொழுதும் தி.மு.க. ஆட்சிதான் என்பது உறுதியாகியுள்ளது. எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந.தாலும் , எங்கள் ஆட்சிதான். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற எத்தனை அமைப்புகள் ஒன்று சேர்ந்தாலும் வலுவான ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்தும் சக்தி யாருக்கும் இல்லை.

நெல்லை தேரோட்டத்தில் கிறிஸ்தவரான அப்பாவு மற்றும் இஸ்லாமியரான எம்.எல்.ஏ அப்துல் வகாப் ஆகியோரும் வடம் பிடித்தனர். இதே சமூக நீதி தொடர வேண்டுமென்றால் தி.மு.க. ஆட்சி வரவேண்டும் என்றார்.

இறுதியாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகையை வல்லக்கோட்டை கோவிலுக்குள் அனுமதிக்கப்படாதது குறித்த கேள்விக்கு, "அதிகாரிகள் மீது தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

More News >>