நெல்லையப்பர் தேரோட்டம் முடிந்தது... டவுன் வீதிகளில் 11 டன் குப்பைகள் அகற்றம்

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை முடிவடைந்தது. டவுன் ரத வீதிகளில் இன்று 11 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. நெல்லை சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை காண ரத வீதிகளுக்கு வந்திருந்தனர். காலை 8:30மணிக்கு தொடங்கிய தேரோட்டம் இரவு 10:50 மணி வரை நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு வரை ரத வீதிகளில் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் டவுன் ரத வீதிகளில் குவிந்த குப்பைகளை உடனடியாக அகற்றும்படி நெல்லை மாநகராட்சி கமிஷனர் மோனிகா ரானா உத்தரவிட்டார். தொடர்ந்து, மாநகராட்வி சுகாதார அலுவலர் டாக்டர். ராணி அறிவுறுத்தலின் பெயரில் டவுன் மண்டல சுகாதார அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், இளங்கோ மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் குப்பைகளை அகற்றினர். பேப்பர் கப்கள், தட்டுகள், பூ மாலைகள், பிளாஸ்டிக் பொருட்கள், கழிவு பொருட்கள் என 11 டன் குப்பைகள் இன்று ரத வீதியில் இருந்து அகற்றப்பட்டு ராமையன்பட்டி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து ரத வீதிகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

More News >>