பெயின்டை மாற்றினால்தான் மானியம்... அதிர்ச்சியில் கூடங்குளம் தவெக மீனவர்கள்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள கூட்டப்புளி கிராமத்தில், த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிக்கொடி வண்ணம் பூசப்பட்ட 10 மீனவர்களின் படகுகளுக்கு அரசு மானிய மண்ணெண்ணெய் வழங்க மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தியா, சூசை, சூடி, பெலிக்கான், திபூர்சியான், தீபன், தீபகு ரூஸ், டெலஸ், ரூபன் மற்றும் அஜித் ஆகிய 10 மீனவர்கள் தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள்.இதனால், தங்கள் படகுகளுக்கு தமிழக வெற்றிக்காக கட்சி கொடியில் வண்ணம் பூசியிருந்தனர். தமிழக வெற்றிக் கழகக் கொடி வண்ணத்தில் படகுகள் இருந்ததால், உரிமையாளர்களுக்கு இந்த மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய மானியமான 250 லிட்டர் மண்ணெண்ணெய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மீனவர்கள் துறை அலுவலகத்தில் முறையிட்டபோது, குறிப்பிட்ட கட்சி கொடியின் வண்ணத்தில் படகுகள் உள்ளன. பெயின்டை மாற்றி அடியுங்கள். மாற்றவில்லையென்றால் மானியம் கிடையாது' என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த த.வெ.க. கட்சியைச் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

More News >>