மருத்துவமனையில் இருந்து உடல்நலம் தேறி வீடு திரும்பினார் புஷ்..!
உடல் நல குறைபாட்டினால் டெக்சாஸிலுள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W. புஷ், குணமாகி வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.
அமெரிக்காவின் 41வது அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்க்கு தற்போது 93 வயதாகிறது. அவர் ஒரு வகை பார்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி பார்பரா, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி மரணமடைந்தார். பார்பராவின் உடல் அடக்கம் ஏப்ரல் 21-ம் தேதி நடந்தது.
மறுநாள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு புஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நோய் தொற்றுக்காக சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், அவர் நலம் பெற்று விட்டதாக அறிவித்துள்ளனர்.
ஜார்ஜ் புஷ்ஷின் மகனும் ஃப்ளோரிடா மாகாண முன்னாள் ஆளுநருமான ஜெப் புஷ், "அப்பா வீடு திரும்புகிறார். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி" என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com