பத்திரிக்கையாளர்களை கேமராவை பிடுங்கி அடித்து விரட்டுங்கள்- வைகோவுக்கு கடும் கண்டனம்

தென்காசி மாவட்ட பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பவானி.ஆ வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

'விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நேற்று  நடைபெற்ற மதிமுக செயற்குழு கூட்டத்தில்  கலந்து கொண்டு வைகோ பேசினார். அப்போது, அரங்கத்தில் இருந்து வெளியேறிய தொண்டர்களை பார்த்து வைகோ கத்தினார். எங்கேடா போறீங்க என்று ஆசேவப்பட்டார். இந்த காட்சியை வீடியோ எடுத்த  பத்திரிக்கையாளர்களை தனது தொண்டர்கள் மூலம் தாக்க உத்தரவிட்டார். இதன் காரணமாக அங்கிருந்த தந்தி டி.வி,பாலிமர் நியூஸ் ,தமிழ் ஜனம் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை,  வன்மையாக கண்டிக்கிறோம்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

More News >>