திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுக்குள் இரவில் சென்ற பாதிரியார்... கிரெண்டர் கும்பல் செய்த அட்டூழியம்
திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றுக்குள் இரவில் சென்று, ஓரினச்சேர்க்கை கும்பலிடம் சிக்கிய கிறிஸ்துவ பாதிரியாருக்கு, அடி, உதை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கொட்டாரம் பங்கு, கத்தோலிக்க பாதிரியாராக இருப்பவர் அருள்சீலன்( 50) இவர், நேற்று முன்தினம் மாலை, உவரி தேவாலயம், பொத்த காலன் விளை தேவாலயத்துக்கு காரில் சென்றார். பின்னர், இரவு, 7 மணியளவில் வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுள்ளார்.
அங்கு, ஓரின சேர்க்கையாளர்களுக்கான 'கிரெண்டர்' ஆப்பை பயன்படுத்தும், 6 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் பாதிரியாரை மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மொபைல் போன், ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்டவற்றை பறித்தனர். தொடர்ந்து, அவரது காரிலேயே கங்கைகொண்டான் அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, ஷாப்பிங் செய்துள்ளனர். பின், ஹோட்டலில் பார்சல் சாப்பாடு வாங்கி, சீவலப்பேரி செல்லும் சாலையில், காரை நிறுத்தி, காட்டு பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர்.
அதிகாலை 3 மணியளவில் அந்த பகுதிக்கு ரோந்து வந்த கங்கைகொண்டான் போலீசாரை பார்த்ததும், இளைஞர்கள் ஓடி விட்டனர். தொடர்ந்து, பலத்த காயங்களுடன் காரில் முனங்கியபடி இருந்த பாதிரியாரை மீட்ட போலீசார், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதிரியார் ஏன் இரவு நேரத்தில் தாமிரபரணி ஆற்றுக்குள் சென்றார்... என்கிற கோணத்தில் விசாரிக்கின்றனர்.