தென்மாவட்டத்தில் 9 மனித உரிமை மீறல் வழகுகள்... ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை
தமிழகத்தில் மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் உறுப்பினர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணை மாதம் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மனித உரிமைகள் மீறல் வழக்குகள் குறித்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை நடைபெற்றது.
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை மேற்கொண்டார். இதில், 9 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 22-ந்தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.