ஜெயம் ரவி நடிப்பில் இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்!

ஜெயம் ரவி நடிப்பில் இந்தியாவின் முதல் விண்வெளிப் படம் என்ற அடைமொழியுடன் ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் வருகிற ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'மிருதன்' படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் அடுத்ததாக இயக்கும் திரைப்படம்தான் ‘டிக் டிக் டிக்’. 

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.  இதுவரை ஹாலிவுட்டை கலக்கிக் கொண்டிருந்த ஸோம்பி கான்செப்ட்டை, 'மிருதன்' படம் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தினார், இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்தியாவின் முதல் விண்வெளிப் படம் என்ற அறிவிப்போடு வெளியான 'டிக் டிக் டிக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரையும் கவர்ந்தது. விண்வெளி வீரர்களின் உடையில் ஜெயம் ரவி இருக்கும் இந்தப் படம், இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் உலகமெங்கிலும் வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>