தூத்துக்குடி திரேஸ்புரம் துறைமுகத்தில் மீன் வாங்க அலை மோதிய கூட்டம் 

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது .

திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ் கடலில் தங்கி சுமார் 500-க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் தற்போது மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் சுமார் 250 க்கும் மேற்பட்ட படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளன . இந்நிலையில்  இன்று சனிக்கிழமை என்பதால் ஆழ்கடலுக்குச் சென்ற நாட்டு படகுகள் கரை திரும்பின. 

இதனால்,  மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது . மீன்களின் வரத்து  குறைவாக  காணப்பட்டாலும் கேரளா கர்நாடக உள்ளிட்ட மேற்க்கு கடற்கரையோர மாநிலங்களின்  மீன்பிடி தடைக்காலம் இருப்பதால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது 

சீலா மீன் கிலோ 800 ரூபாய் வரையும் பாறை ,ஊழி, விளைமீன் ஆகிய மீன்கள் கிலோ 400 முதல் 500 ரூபாய் வரையும் பார் கிளி கூடை 2000 ரூபாய் வரையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஏற்றுமதி ரக மீன்களான பண்டாரி, தம்பா, களவா, கிளை வாழை ஆகிய மீன்கள் கிலோ 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும் சாலை மீன் ஒரு கூடை 1500 முதல் 2000 ரூபாய் வரையும் சூறை மீன் கிலோ 150 ரூபாய் வரையும் விற்பனையானது. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

More News >>