அமெரிக்க பெண்ணின் வயிற்றில் அறுபது கிலோ கட்டி!
அமெரிக்காவில் கனெக்ட்டிகட்டில் 38 வயது பெண்ணின் வயிற்றிலிருந்து 132 பவுண்டு (ஏறக்குறைய 60 கிலோ) கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
வெர்மண்ட் லார்னர் மருத்துவ கல்லூரியின் உதவி பேராசிரியரான மகப்பேறு மற்றும் புற்றுநோய் நிபுணர் டாக்டர் வாக்ன் ஆண்டிக்யானிடம் பெண்ணொருவர் கடும் வலியோடு சிகிச்சைக்கு வந்தார். கடைசியாக இரு மாதங்கள் கட்டி மிக வேகமாக வளர ஆரம்பித்தது. கட்டியின் காரணமாக அவர் அதிக எடையுடன் காணப்பட்டார். ஆனால், அந்தக் கட்டி செரிமான பாதையில் இருந்ததால், அவரால் சரியாக சாப்பிட இயலவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் டான்பெரி மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் டாக்டர் லினஸ் சுவாங் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இடப்புற சினைப்பையில் இருந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.
நான்கு வாரங்களில் அவர் அலுவலகம் சென்றபோது யாருக்குமே அவரை அடையாளம் தெரியவில்லை. "அந்தப் பெண் விரும்பினால் இன்னொரு குழந்தை கூட பெற்றுக் கொள்ளலாம். அவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்," என்று டாக்டர் வாக்ன் ஆண்டிக்யான் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com