திசையன்விளை வி.எஸ்.ஆர்.இண்டர் நேஷனல் பள்ளியில் இறகு பந்து போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பரிசு வழங்கினார்!

நெல்லை மாவட்டம் திசையன்விளை வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் இறகு பந்து போட்டி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், இயக்குநர் சௌமியா ஜெகதீஷ், முதல்வர் பாத்திமா எலிசபெத், ஒருங்கிணைப்பாளர் .மரிய ரூபா குத்து விளக்கு ஏற்றி போட்டியைத் தொடங்கி வைத்தனர். இதில் 13வயது 15வயது 17வயதிற்குட்பட்ட மாணவர் மற்றும் மாணவியர், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான இரட்டையர் பிரிவு போன்ற பல பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெற்றது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் முதலிடத்தை வென்றவர்களுக்கு சுழற் கோப்பையுடன் ரூபாய் 7,000 ரொக்கப் பரிசும், இரண்டாமிடத்தை வென்றவர்களுக்கு சுழற்கோப்பையுடன் ரூ. 5000 ரொக்கப் பரிசும், மூன்றாமிடத்தை வென்றவர்களுக்கு சுழற்கோப்பையுடன் ரூ. 3,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. பரிசுகளை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் வழங்கினார். பல்வேறு இடங்களில் இருந்து ரசிகர்கள் திரண்டு வந்து போட்டியை கண்டுகளித்தனர்.

More News >>