ஜாதி அரசியலில் தமிழக காங்கிரஸ்... கிள்ளியூர் எம்.எல்.ஏ மீது பரபர புகார்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் நிறைந்த ஒரு கட்சி. தற்போது,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை ஓரம் கட்ட பல காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு  பெரிய கும்பலே செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே  புகைப்படமும் செல்வபெருந்தகை படமும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சிக்னாக அழைப்பிதலை அச்சடித்துள்ளது விருதுநகர் மாவட்ட காங்கிரஸ்.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாக்கூர் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்ற குழு தலைவரான ராஜேஷ்குமாரும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி உதவி தொகை வழங்கும் விழா 9வது ஆண்டாக நடைபெறுகிறது. இதற்காக, வெளியிடப்பட்டுள்ள அழைபிதழில் ராகுல்காந்தி, காமராஜர், மாணிக் தாக்கூர், ராஜேஷ்குமார் ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால்,  மல்லிகார்ஜுன கார்கே  புகைப்படமும் செல்வபெருந்தகை படமும் இடம் பெறவில்லை. இதுதான், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

More News >>