கடையத்தில் பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த பெண்
தென்காசி மாவட்டம் கடையம் மெயின்ரோடு சத்திரம் பாரதி பள்ளி அருகேயுள்ள தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மீனா(வயது 60). சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்துவிட்டார். இதனால் மீனா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் இருந்து மீனா வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியுள்ளது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று கதவை திறந்து பார்த்தனர். அப்போது, வீட்டினுள் மீனா இறந்து கிடந்தார். வயது முதிர்வின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மீனா இறந்துவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.