சந்தைக்கு வரும் தூத்துக்குடி கார்... இன்று முதல் புக்கிங் ஸ்டார்ட்

தூத்துக்குடி வின்பாஸ்ட் நிறுவனம் தயாரிக்கும் மின்சார கார்களுக்கான முன்பதிவு இன்று துவங்கும்' என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் நாட்டை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட், துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, சிலாநத்தம் பகுதியில், 4,250 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைத்துள்ளது. இந்த மாத இறுதியில் வாகனங்கள் தயாரிப்பு தொடங்குகிறது.

கார்களுக்கான முன்பதிவு இன்று முதல் (ஜூலை15) என, அந்நிறுவனம், தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக பிரீமியம் மின்சார கார் மாடலான, 'விஎப் -6 மற்றும் விஎப்- 7 மாடல்' விற்பனை செய்யப்படவுள்ளது. ரூ.21 ஆயிரம் கட்டி முன்னதாகவே புக்கிங் செய்து கொள்ளலாம்.

காருக்கான விற்பனை விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்திய சந்தை நிலவரத்தை கொண்டு முன்பதிவு துவங்கும் போது, விலை விவரம் அறிவிக்கப்படும் என தெரிகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார் விற்பனைக்கு வருகிறது.

More News >>